கோயம்புத்தூர்:பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியினர் பகுதிகளில் Particularly vulnerable Tribal Group திட்டத்தின் மூலம் பழங்குடியின மக்களுக்கு வீடு ஒன்றுக்கு ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில், புதிய குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இப்பணிகள் பயனாளிகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் மலைப்பாங்கானப் பகுதியில் (Hill Areas) கோழிக்கமுத்தி-31, கூமாட்டி-22, நாகர்ஊற்று-38 மற்றும் எருமைப்பாறை-9 ஆகிய பகுதிகளில் மொத்தமாக 100 வீடுகள் கட்டப்பட்டு வருவதின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அதிகாரிகளுடன் நேற்று (டிச.5) ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து சர்க்கார்பதி கிராமம், நாகர் ஊற்று 2இல் கட்டப்பட்டு வரும் 11 வீடுகளைப் பார்வையிட்டார். மேலும், நமக்கு நாமே திட்டம் மற்றும் லட்சுமி மெஷின் ஒர்க் இணைந்து ரூ.38 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ள ஆனைமலை அரசு உயர்நிலைப்பள்ளிக் கட்டடத்தை பார்வையிட்டார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து ஆட்சித்தலைவர் கூறுகையில், “வேட்டைக்காரன் புதூர் பழங்குடியின மக்களுக்காக Particularly vulnerable Tribal Group திட்டத்தின் மூலம் 150 வீடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மக்களிடம் நேரடியாகப் பேசி, விருப்பத்தை கேட்டறிந்து எந்த மாடலில் வீடு கட்ட முடியும் என்ற கருத்துகளையும் கேட்டறிந்து வீடு கட்டும் பணியினை உடனடியாக தொடங்க அறிவுறுப்பட்டுள்ளது.