கோயம்புத்தூர் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்கள் 321 பேருக்கு பணி நியமன ஆணையை கடந்த 6ஆம் தேதி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வழங்கினார். இதில், பட்டதாரிகளுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதனைக் கண்டித்து ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துப்புரவுப் பணியாளர்கள் அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "10 ஆண்டுகளாக பல துப்புரவுத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் அனுபவம் இல்லாதவர்களுக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் பணம் கொடுத்து முறைகேடாக இந்தப் பணியை பெற்றுள்ளனர்" என குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க:பெண்தோழியை காண வந்து கைதான ரவுடி!