கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயனின் மகள் ஹேமர்னா (7). கடந்த சில தினங்களுக்கு முன் கைவிரலில் அடிபட்ட நிலையில் நேற்று முன் தினம் ஹேமர்னா சிங்காநல்லூர் பகுதியில் உள்ள முத்தூஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு பெற்றோர் அனுமதித்த நிலையில் நேற்று மாலை சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்து சிறுமியின் உடலை உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கைவிரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனை முன்பு பெற்றோர் போராட்டம் இந்நிலையில், சிறுமியின் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் எனக்கூறி சிறுமியின் உறவினர்கள் தனியார் மருத்துவனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பேசிய சிறுமியின் பெற்றோர், குழந்தைக்கு தலையில் அடிபடாமலேயே அடிபட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் பொய் சொல்கிறார்கள் என்றும் முத்தூஸ் மருத்துவமனையை மூட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கைவிரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி உயிரிழப்பு: மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமா?