ஒரு ஆண் கல்வி கற்றால் அந்தக் கல்வி அவனைச் சாரும், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமே கல்வி கற்றதாகும். இது கல்வி மட்டுமின்றி தற்போது தந்தைகள் அற்றுப்போன முதற்கொண்டு பல குடும்பங்களை வழி நடத்திவருகின்றனர் பெண்கள்.
அப்படி பல குடும்பங்களை நடத்திவரும் பெண்கள் இந்தக் கரோனா ஊரடங்கால் வேலையிழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்திசெய்ய முடியாமல் தவித்துவந்தன. அப்படி தவித்த பெண்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உதவியுள்ளது கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கல்பவிருட்ஷா துணி நிறுவனம்.
நிறுவனம் தொடங்கி சில நாள்களிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தாங்கள் வழக்கமாகத் தயாரித்த சட்டை, பைகளுக்கு சந்தைப்படுத்தல் இல்லாததால், முகக்கவசத்தை தயாரிக்க முடிவெடுத்ததாகவும், இதை தயாரிக்கும் பணிகளில் ஊரடங்கால் வேலையிழந்த பெண்களை ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார் கல்பவிருட்ஷா துணி நிறுவன மேலாளர் கோகுல்ஆனந்த்.
வேலை இழந்த பெண்களுக்கு கைகொடுத்த நிறுவனம்! தனி மரம் தோப்பாகாது என்பது போல் பெண்களின் முன்னேற்றத்திற்கு ஆங்காங்கே வித்திட்டாலும் அனைவரும் வித்திட்டால்தான் பெண் என்பவள் விருச்சமாகி குடும்பம் மட்டுமின்றி சமூகத்திற்கும் நிழலாய் நிற்பாள்.
இதையும் படிங்க...குற்றம் 03: உங்கள் அடையாளமும் திருடப்படலாம்!