சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த பீளமேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, 32 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சிறுமி தனியார் மருத்துவமனையிலும் அந்த பெண் இஎஸ்ஐ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் ஒரே நாளில் 5 பேருக்கு கரோனா - Coimbatore corona update
சென்னை: ஒரே நாளில் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Coimbatore corona update
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வந்த நபருடன் தொடர்பில் இருந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விழுப்புரத்தில் இருந்து வந்த பயணியிடம் தொடர்பில் இருந்ததால் 37 வயது பெண் ஒருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து அனைவரும் இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:மதுரையில் தொடங்கிய தனியார் பேருந்துகள் இயக்கம்