சூலூர் வேளாண்மைப் பல்கலைக்கழக வரைகலை அலுவலர் ரவி மூர்த்தி தலைமையிலான பறக்கும் படையை சேர்ந்த அலுவலர்கள் சூலூர் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது.

"இந்த பணமானது கோவை புலியகுளத்திலிருந்து வாகராயம் பாளையம் ஏடிஎம் மையத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதாக", அந்த வேனில் வந்தவர்கள் கூறினர்.
ஆனால், அதற்கு உரிய ஆவணம் கொண்டு வரப்படாததால், அதனை பறிமுதல் செய்து சூலூர் தேர்தல் அலுவலர் பாலகிருஸ்ணன், உதவி தேர்தல் அலுவலர் ஜெயராஜிடம் ஒப்படைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட் பணம், ஒரு கோடியே 98 லட்சத்து ஆறாயிரத்து 400 ரூபாய் மதிப்புடையது என அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.