தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வனத்துறை பாதுகாப்பு அமைப்பினர் வன பகுதியில் தூய்மைப் பணி - உடும்பு

கோவை: தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு அமைப்பினர் வன பகுதியில் குப்பைகளை அகற்றும்போது அடிப்பட்ட நிலையில் இருந்த உடும்பை மீட்டு வனத்துறை அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு அமைப்பினர்
தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு அமைப்பினர்

By

Published : Jan 3, 2021, 10:35 PM IST

Updated : Jan 3, 2021, 10:43 PM IST

கோவை வனச்சரகம் தடாகம் பிரிவிற்கு உட்பட்ட மாங்கரை வனத்துறை பகுதியில் தமிழ்நாடு வனத்துறை பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் இயற்கை, விலங்குகள் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பினர் சுமார் 20-க்கும் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.


அப்போது மலையோர பாதை ஓரத்தில் அடிபட்ட நிலையில் உடும்பு ஒன்று கிடந்துள்ளது. அதனை மீட்ட அவர்கள், வனவர் அருண் சிங்கிடம் ஒப்படைத்தனர்.

இந்த தூய்மைப் பணியின்போது ஒன்றரை டன் பாலிதீன், கண்ணாடி மது பாட்டில்களையும் அவர்கள் அகற்றினர்.

அடிபட்ட நிலையில் இருந்த உடும்பு

மலைகள், காடுகள் என்பது இயற்கை சூழ்நிலைகளை சீராக வைத்து இருக்கும் அரண், ஆனால் இதுபோன்று குப்பைகள் கொட்டிக்கிடந்தால் இயற்கை பாதிக்கப்படும் என்றும், இதை நம்பி வாழ்ந்துவரும் வன உயிரினங்கள் மிகவும் பாதிக்கப்படும் என்றும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

மலைப்பாதையில் குவிந்திருந்த மது பாட்டில்கள்

இதையும் படிங்க:ஏன் அரசியலுக்கு வந்தேன்... கமல்ஹாசன் விளக்கம்!

Last Updated : Jan 3, 2021, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details