கோயம்புத்தூர்: சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில், நூற்றாண்டு பழமை வாய்ந்த மாகாளியம்மன் மற்றும் மாரியம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனையொட்டி சங்கமம் கலைக் குழு சார்பில் 37-ஆவது ஒயிலாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் கருமத்தம்பட்டியை சார்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வயது வித்தியாசம் இன்றி குழுவாக இணைந்து கிராமியப் பாடல்களுக்கு நடனமாடினர்.
சமூக கருத்துகளையும், உள்ளூர் நடப்புகளையும் விளக்கும் பாடல்களை தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றி இசைத்து அரங்கேற்றம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக கண்ணெதிரே தோன்றினாள் என்ற பாடலுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரு சேர ஒயிலாட்ட நடனமாடியது பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.