கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் ஏற்கெனவே இரண்டு கரோனா சிகிச்சை மையங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், சித்த மருத்துவச் சிகிச்சைக்கான படுக்கை வசதிகளோடு, கூடுதலாக 473 படுக்கை வசதிகள் கொண்ட இரு சிகிச்சை மையங்கள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (மே.20) ஆய்வு செய்தார். சிகிச்சைகள் தொடர்பாக அலுவலர்கள் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
கரோனா: சித்த மருத்துவச் சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் - மு.க.ஸ்டாலின் ஆய்வு
கோயம்புத்தூர்: கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், கொடிசியா வளாகத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 253 படுக்கைகளையும் அவர் ஆய்வு செய்தார். இங்குள்ள நான்கு அரங்குகளில் ’டி’ மற்றும் ’இ’ அரங்கில் 1280 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 701 படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொடிசியா வளாகத்தில் சிகிச்சைப் பெறும் 50 ஆயிரம் பேருக்கு, கோவை கிராமத்து பால் நிறுவனம் சார்பில், 10 ஆயிரம் லிட்டர் பால் வழங்குவது குறித்து அதன் நிறுவனர் ஜனார்த்தனிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: நயன்தாராவின் தடுப்பூசி: சர்ச்சையும், விளக்கமும்!