தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய தொழில் நிறுவன காலிப்பணியிடங்கள் நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம்

கோவை: மத்திய அரசின் தொழில் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கையெழுத்து இயக்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

kovai
kovai

By

Published : Mar 1, 2020, 12:06 PM IST

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் முன்பு தமிழ்நாட்டில் செயல்படும் மத்திய அரசின் தொழில் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

அதனை, கோவை அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் கிழக்கு மண்டலத் தலைவர் கே.சி. மூர்த்தி தொடங்கிவைத்தார். அவருடன் செயலாளர் மணிகண்டன், மாவட்டச் செயலாளர் வசந்தகுமார், மண்டல நிர்வாகக் குழுவினர் கலந்துகொண்டனர்.

கையெழுத்து இயக்கம்

அதில் இளைஞர்கள், பொதுமக்கள் எனப் பலர் கையெழுத்திட்டனர். இதுபற்றி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கூறுகையில், பல லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள், இளைஞர்களிடம் கையெழுத்து வாங்கி அதனை மத்திய அரசிடம் ஒப்படைக்கப் போவதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:திருமணத்தில் சிஏஏவிற்கு எதிராக கையெழுத்திட்ட தம்பதி!

ABOUT THE AUTHOR

...view details