கோவை காந்திபுரம் டெக்ஸ்டூல் பாலம் அருகே ஆகஸ்ட் 5ஆம் தேதி இரவு 11 மணிக்கு அதிவேகமாக வந்த மாருதி சிப்ட் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மதன் என்பவரும், அவரது தாய் இந்துராணி என்பவரும் படுகாயம் அடைந்தனர்.
பின்னர் இருவரும் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவருகின்றனர்.
விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி விபத்தை ஏற்படுத்திய கார் காவல் துறையைச் சேர்ந்தவரின் கார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த ராஜ்குமார் (காவலர் அல்ல) மீது விபத்து ஏற்படுத்துதல், வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காட்டூர் போக்குவரத்து புலனாய்வு துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:டென்ட்டில் தங்கி, அரைக்கால் ட்ரவுசர் அணிந்து திருடி வந்த கும்பல் - சிக்க வைத்த சிசிடிவி காட்சி