தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூகுள் மேப்புடன் சிசிடிவி கேமரா பொருத்திய காவல் துறை!

கோயம்புத்தூர்: குற்றங்களை தடுக்கும் வகையில் கூகுள் மேப்புடன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்துள்ளார்.

CCTV camera

By

Published : Nov 25, 2019, 8:04 PM IST


கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவில் குற்றங்கள், விபத்துக்கள் நிகழாமல் தடுக்கவும், நிகழ்ந்த குற்றங்களை கண்டறியவும் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராவை பொருத்துமாறு மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தவிட்டார். அதனடிப்படையில், கோவை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பெருத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், கோவை ராமநாதபுரம் டி-1 காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 73 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளது. அதன் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் கலந்துகொண்டு விழாவை தொடக்கிவைத்தார். இந்நிகழ்வின்போது, மாநகர துணை காவல் ஆணையர் பாலாஜி சரவணன், குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் உமா உடனிருந்தனர்.

73 கண்காணிப்பு கேமராக்கள் தொடக்க விழா

இதுகுறித்து மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன் கூறுகையில், இந்த கண்காணிப்பு கேமராவை கூகுள் மேப்புடன் இணைத்துள்ளதாகவும், இந்த கேமராக்கள் எங்கு இயங்குகிறது என்ற விவரங்களுடன் தெரிந்து கொள்ளலாம் என அவர் கூறினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், கோவை மாநகரில் ஒன்பதாயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது என்றும், தமிழ்நாட்டில் முதல் முறையாக கூகுள் மேப்புடன் இணைந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது எனவும் இதுவரை சிசிடிவி கேமராக்கள் மூலம் ஒன்றரை லட்சம் வழக்குகள் புலனாய்வு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details