தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி - couple

கோவை: புதுமணத் தம்பதி மணக் கோலத்தில் வாக்களிக்க வந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

புதுமணத் தம்பதிகள்

By

Published : May 20, 2019, 7:57 AM IST

மே 19ஆம் தேதி காலை ஏழு மணி முதல் சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.

வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதிகள்

இந்நிலையில், மாலை நான்கு மணியளவில் கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட கருமத்தம்பட்டி புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் சிந்தியா என்ற மணப்பெண் தனது திருமண வரவேற்பு நிகழ்வினை முடித்துவிட்டு கணவர் அமல்ராஜுவுடன் மணக் கோலத்திலேயே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

இதேபோல் இதே வாக்குச் சாவடிக்கு, கர்ப்பிணி பெண் இன்பேண்டா என்பவர் அவரது வளைகாப்பை முடித்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

தங்களது சுபகாரியங்களுக்கிடையேயும் ஜனநாயகக் கடமையாற்றிய இப்பெண்கள் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

ABOUT THE AUTHOR

...view details