தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூலூரில் சூறாவளியாக சுழன்றுவரும் ஸ்டாலின்! - dmk

கோவை: சூலூரில் பரப்புரை மேற்கொண்டுவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பெண் குழந்தை ஒன்றுக்கு கண்மணி என்றும், ஆண் குழந்தைக்கு அன்பழகன் எனவும் பெயரிட்டுள்ளார்.

stalin

By

Published : May 6, 2019, 3:03 PM IST

சூலூர் தொகுதியில் வருகின்ற மே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சூலூர் தொகுதியின் பல்வேறு இடங்களில் நேற்று பரப்புரை மேற்கொண்ட ஸ்டாலின், பட்டணம்புதூர், பட்டணம் பகுதிகளில் இன்று வாக்கு சேகரித்தார்.

அப்போது, தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக காலம் கடத்தி வருவதாகவும், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட உள்ளாட்சித் துறை செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கூறினார்.

ஸ்டாலின் பரப்புரை

மேலும், சூலூர் தொகுதியின் அடிப்படை உரிமைகளைக் கேட்டுப்பெற நீங்கள் தேடி செல்ல வேண்டியதில்லை, அவரே வருவார் எனவும் வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். இதற்கிடையே, ஆண் குழந்தை ஒன்றுக்கு ‘அன்பழகன்’ என்றும், பெண் குழந்தைக்கு ‘கண்மணி' எனவும் ஸ்டாலின் பெயர் சூட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details