இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து கழகம்,கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36ஆவது தேசிய கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோவையில் நடத்துவதற்கு கூடைப்பந்து சம்மேளனம் வாய்ப்பு வழங்கியது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 25 மாநிலங்களைச் சேர்ந்த 700 போட்டியாளர்கள், நடுவர்கள், மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மே 14ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டிகள் நேற்று (மே 21) முடிவடைந்தன. இந்தப் போட்டியில் பெண்கள் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் கேரளா அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் கேரளா அணிகள் 80 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. தமிழ்நாடு அணி 69 புள்ளிகள் எடுத்து தோல்வி அடைந்தது.