தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யோகி ஆதித்யநாத் வருகையை ஒட்டி அனுமதியின்றி நடந்த வாகனப் பேரணி: பாஜகவினர் மீது வழக்குப்பதிவு - இருசக்கர வாகனப் பேரணி

கோயம்புத்தூர்: அனுமதியின்றி இரு சக்கர வாகனத்தில் பேரணி சென்ற பாஜக கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், இந்து முன்னணியின் மாநிலச் செயலர் கிஷோர் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

பாஜக இருசக்கர வாகனப் பேரணி
பாஜக இருசக்கர வாகனப் பேரணி

By

Published : Apr 1, 2021, 1:55 PM IST

நேற்று (மார்ச்.31) உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது புலியகுளத்தில் இருந்து தேர் நிலைத்திடல் வரை பாஜகவினர் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்றனர்.

அப்போது அவ்வழியே இருந்த கடைகளை அடைக்க சொல்லி பாஜகவினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், பேரணி சென்றபோது டவுன்ஹால் பகுதியில் மூடாமல் இருந்த கடைகளை கற்களைக் கொண்டு பாஜகவினர் தாக்கிய காணொலி ஒன்றும் நேற்று வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வந்தது.

இது மக்களை பெரும் அதிச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

பாஜகவின் இப்பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்காத நிலையில், அனுமதியின்றி பேரணி நடத்தியற்காக பாஜக, கோவை மாவட்டத் தலைவர் நந்தகுமார், இந்து முன்னணியின் மாநிலச் செயலர் கிஷோர், மாவட்டச் செயலர் தசரதன், மாநிலக் குழு உறுப்பினர் குணா ஆகியோர் மீது பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

மேலும் அரசு அலுவலர்களின் உத்திரவிற்கு கீழ்படியாதது, முறையற்ற தடுப்பு, தொற்று நோயை பரப்பும் விதத்தில் செயல்படுதல், சட்ட விரோதமாக ஒன்று கூடுதல் ஆகிய நான்கு பிரிவுகளில் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இஸ்லாமிய குடியிருப்பில் வாக்குசேகரித்த பாஜக வேட்பாளர்

ABOUT THE AUTHOR

...view details