கோயம்புத்தூர்: கேரளா மாநிலம் பாலக்காடு பகுதி ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர் சஞ்சித். இவர், கடந்த நவம்பர் 15ஆம் தேதி அப்பகுதியில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, கேரள காவல் துறையினர் சஞ்சித் கொலை தொடர்பான விசாரணையில் இருவரை கைது செய்தனர். சஞ்சித் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில அடையாளம் தெரியாத நபர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரித்ததில் கொலை செய்ய மாருதி 800 கார் ஒன்று பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
வழக்கில் மாருதி 800
அந்த மாருதி 800 காரை, பொள்ளாச்சி குஞ்சிபாளையம் பகுதியில் முருகானந்தம் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. இதன்பின்னர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிஜி பாஸ்கர் தலைமையில் காவலர்கள் பொள்ளாச்சி வந்தனர்.
அங்கு, அந்த காரை வாங்கிய முருகானந்தத்தை காவலர்கள் விசாரணை செய்ததில் காரின் உதிரிப்பாகங்கள் பிரிக்கப்பட்டு, இன்ஜின் நம்பரை அடையாளம் நபர்களால் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.
பொள்ளாச்சியில் சிக்கிய கொலையாளியின் கார் இதனால், கேரள காவல்துறையினர் கார் உரிமையாளரை சேலத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: Kodanad case: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - தனபாலின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை