தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! - தூத்துகுடி

கோவை, அரியலூர், தூத்துகுடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

bribery-department-raids-at-various-places-in-tamil-nadu

By

Published : Jul 16, 2019, 8:02 AM IST

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவையில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனையின் போது

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத 47 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

அரியலூரில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனையின் போது

இதே போல், தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இங்கு பத்திரப் பதிவு, திருமணப் பதிவு உள்பட பல்வேறு நடைமுறைகளுக்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 71,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துகுடியில் லஞ்ச ஒலிப்பு துறையினர் சோதனையின் போது

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள், சார் பதிவாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details