கோயம்புத்தூர் குனியமுத்தூர் பிருந்தாவன் பகுதியை சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் வியாபார நிமித்தமாக செப்டம்பர் 23ஆம் தேதி வெளியூர் சென்றார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியும் வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தையின் வீட்டிற்கு சென்றார்.
வெளியூர் சென்ற முபாராக் அலி இரவு வீடு திரும்ப தாமதமானதால் அவரும் தனது மாமனார் வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டிற்கு வந்தனர்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின் இருவரும் உள்ளே சென்று பார்க்கும்போது பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகைகள், வியாபாரத்திற்கு வைத்திருந்த 3 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பணம், விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.