ஈரோடு மாவட்டம் கிருஷ்ணன்பாளையத்தைச் சேர்ந்தவர் சையது ஷாஜ். இவரது மகன் சையது ஷகில்(13). இந்நிலையில் சையது ஷாஜ் இன்று தன் குடும்பத்தாரோடு கோவையிலுள்ள வால்பாறை பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இதையடுத்து கருமலை அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில் அருகேவுள்ள ஆற்றில் புகைப்படம் எடுப்பதற்காக சையது ஷகில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் ஆற்றில் தவறி விழுந்து, பாறை இடுக்கில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், சிறுவனை மீட்டு கருமலை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுற்றுலா வந்த சிறுவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:காதல் திருமணத்தால் நிகழ்த்தப்பட்ட கொடூர கொலைகள்: குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை!