1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்தனர். இன்று அவர்களுக்கு இந்து அமைப்புகள் சார்பில் 23ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி ஆர்எஸ் புரம் பகுதியில் நடைபெற்றது. இதில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், துணைத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கேரள இந்து தர்ம பேராசிரியர் சசிகலா ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, ”தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அழிக்கின்ற முயற்சி நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகள் பலரும் பாரத் மாதா கி ஜே என்ற வார்த்தையை கெட்ட வார்த்தையாக நினைக்கின்றனர், திராவிட கட்சிகளின் சரித்திரத்தை ஒழிக்க வேண்டும், தேர்தலுக்குப் பிறகு பாஜக உறுப்பினர்கள் பெரிய அளவில் சட்டப்பெரவையில் அமர்வார்கள். 2021 தேர்தலுக்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது” என்று தெரிவித்தார்.