கோயம்புத்தூர்: உலக யோகா தினம் (ஜூன் 21) இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகம், தனியார் அலுவலங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் பல்வேறு அரசியல் கட்சியினருக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பாஜகவினர்களுக்கும் கட்சி சார்பில் யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதன் படி கோவை மாநகரில் உள்ள உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், சுதாகர் ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உட்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் யோகா பயிற்சியினைப் பெற்றனர். இந்த நிகழ்வில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “பாரத பிரதமர் மோடியின் ஆட்சியில் 9 ஆண்டுகளில் யோகா பயிற்சியானது, உலகம் முழுவதும் முக்கியத்துவத்தை பெற்று உள்ளது. மேலும் உலக நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களுக்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருகின்றது. மேலும், உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை இந்தியா வழங்கி இருங்கிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நிறைவு - மருத்துவமனை அறிக்கை