தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவையில் புதிதாக அமையவுள்ள பாஜக அலுவலகம்: அடிக்கல் நாட்டிய எல். முருகன்

கோயம்புத்தூர்: பீளமேடு அருகே அமையவுள்ள பாஜக அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

அடிக்கல் நாட்டிய எல்.முருகன்
அடிக்கல் நாட்டிய எல்.முருகன்

By

Published : Nov 23, 2020, 4:28 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு பகுதியில் புதிதாக அமையவுள்ள பாஜக அலுவலகத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (நவ.23) நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இதில் மத்திய இணை அமைச்சர் முரளிதரன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், பாஜக துணைத் தலைவர் கனகசபாபதி, பொருளாளர் எஸ்.ஆர். சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த முருகன் கூறியதாவது, “தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜக கட்சிக்கு அலுவலக கட்டடங்கள் கட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாணியம்பாடி, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், இன்று (நவ.23) கோவையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் ஆறு மாதங்களுக்குள் கட்டி முடித்து, பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா திறந்துவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நான் நடத்துகின்ற வேல் யாத்திரையில் எப்போதும் கைதுசெய்யப்படுவது போலவே நேற்றும் கோவையில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.

அதனைத் தொடர்ந்து பழனிக்கு யாத்திரை தொடங்குகிறேன். திருச்செந்தூரில் வருகின்ற டிசம்பர் 5 ஆம் தேதி இந்த யாத்திரை நிறைவடைய இருக்கின்றது” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், “மத்திய வேளாண் பாதுகாப்புச் சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல; இந்தச் சட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்களது பொருள்களுக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம், எங்கே வேண்டுமானாலும் விற்பனை செய்ய முடியும்.

அடிக்கல் நாட்டிய எல். முருகன்

அரசியல் லாபத்திற்காகவே காங்கிரஸ் கட்சியினர் இந்த வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடிவருகின்றனர். கேரளாவில் இயற்றப்பட்டுள்ள ‘சைபர் லா’ கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவுள்ள கொடூரமான சட்டமாகும். கேரளா தங்கக் கடத்தல் விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இல்லாமல் அரசு விசாரணை நடத்திவருகிறது” என்றார்.

இதையும் படிங்க: பாஜகவின் வேல்யாத்திரை 'வேல்' க்கு நோ சொன்ன மருதமலை கோயில் நிர்வாகம்

ABOUT THE AUTHOR

...view details