தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘மக்களின் தாகத்தை தீர்க்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - வானதி சீனிவாசன்! - சிறுவாணி அணை

பக்கத்து மாநிலத்தோடு இணைந்து கூட்டணி அமைக்க தெரிகிறது, விவசாயிகளுக்கு நீரை பெற்று தர முடியாதா? இது தான் முதலமைச்சரின் லட்சணமா? என வானதி சீனிவாசன் கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பினார்.

வானதி சீனிவாசன் பேட்டி
வானதி சீனிவாசன் பேட்டி

By

Published : Aug 5, 2023, 10:48 PM IST

Updated : Aug 6, 2023, 9:02 AM IST

கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி

கோயம்புத்தூர்: பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "1000 பெண்களை தொழில் முனைவோர்களாக ஆக்கும் முயற்சியின் 'சுயம்' என்கிற பெயரில் முதல் பணியாக இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது.

கோவை அம்மன்குளம் பகுதியில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பெண்களுக்கு 'சமர்த்' என்கிற மத்திய அரசின் தையல் பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம். பயிற்சி முடித்தபின், தொழிலை மேற்கொள்ளும் வகையில் இலவச தையல் இயந்திரங்கள் தனியார் உதவியுடன் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

குறிப்பாக பழங்குடியினர், பட்டியலின மக்கள் இதுபோன்ற திட்டங்களை தங்கள் பகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அடிப்படையில், இதுவரை 8 இடங்களில் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த அரசு ஒவ்வொரு பேருந்து நிலையத்திலும் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் வகையில் தாய்ப்பால் கொடுக்க அறை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கோவை மத்திய பேருந்து நிலையத்தில் பெண்கள் தாய்ப்பால் கொடுக்க அமைக்கபப்ட்டுள்ள அறை நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தாமல் மூடப்பட்டுள்ளது.

நான் வருகிறேன் என்று அறிந்தவுடன், அந்த அறை தூய்மை செய்யப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, உள்ளே சென்று மது அருந்த பயன்படுத்துவதால், அசுத்தம் செய்வதால் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மாநகராட்சி, உள்ளாட்சி நிர்வாகங்கள் இளம் தாய்மார்கள் பயன்படுத்தும் வகையில் சரியாக பயன்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும்" என்று கூறினார்.

"சமூக நீதி அரசு, பெண்களுக்கான அரசு என சொல்லும் முதல்வர், பெண்களுக்கு பேருந்து பயணத்தை கொடுத்தேன் என பெருமையாக சொல்லும் முதல்வர், பேருந்து நிலையத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அறையை சரியாக இயங்குகிறதா என பார்த்து, அறையை ஆரோக்கியமாக அறையாக மாற்ற கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வானதி சீனிச்வாசன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குறிப்பிட்ட பகுதியை அழகு செய்வதற்கு மட்டும்மல்லாமல், பொது இடத்தில் கழிவறை, தாய்ப்பால் கொடுக்கும் அறை ஏற்படுத்த மாநகராட்சி ஆணையாளரிடம் பேச உள்ளதாகவும், பெண்களுக்கு இலவசமாக பேருந்து என அறிவிக்கப்பட்டு விட்டு, அந்த பகுதியிலிருந்து முழுவதுமாக பேருந்தை நீக்கிவிடுவதாகவும் சுட்டிகாட்டினார்.

"கர்நாடகாவில் பாஜக அரசு இருக்கும் வரை காவிரி பிரச்னை மக்களை பாதிக்காமல் பார்த்துக்கொண்டது. இதுதான் காங்கிரஸ், திமுகவின் இரட்டை நிலைப்பாடு. பக்கத்தில் உள்ள மாநிலத்தில் மோடிக்கு எதிராக கூட்டணி அமைக்க தெரிகிறது, விவசாயிகளுக்கு காவிரி நீரை பெற்று தர முடியாதா? இதற்கு கடிதம் வேற எழுத வேண்டுமா? இதுதான் மாநிலத்தின் முதல்வர் விவசாயிகளை காப்பாற்றுகிற லட்சணமா?" என்ற கேள்விகளை எழுப்பினார்.

கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சிறுவாணி அணையின் நீர் மட்டத்தை உயர்த்தினால் கோவை மக்களுக்கு குடிநீர் பிரச்னையின்றி கிடைக்கும். 13-15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. குளம் என்று பெயர் தான், ஆனால், குடிக்க நீர் இல்லை. சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

இதுதொடர்பாக பாஜக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கைக்கோர்த்து உள்ள முதல்வர் கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோவை மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ஒட்டுமொத்தமாக அரிசி இருப்பின் நிலையை பார்த்து, நம் மக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததுள்ளது என்றும், அரிசி தேவையான அளவு கையிருப்பு வந்தவுடன் இந்த உத்தரவை மத்திய அரசு மாற்றிக்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:"பொது இடங்களில் கவனத்துடன் பேச வேண்டும்" கட்சி நிர்வாகிகளுக்கு மு.க ஸ்டாலின் அட்வைஸ்!

Last Updated : Aug 6, 2023, 9:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details