உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று (ஆகஸ்ட் 5) ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரமதர் நரேந்திர மோடி, உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல்: கோவையில் பாஜகவினர் ஊர்வலம்! - பாபர் மசூதி வழக்கு
கோவை: அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டத்தை கொண்டாடும் வகையில், கோவையில் பாஜகவினர் ஊர்வலமாக சென்று காரமடை கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
மேலும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவைத் தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள இந்து அமைப்பினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரிலுள்ள பாஜகவினர், காரமடை கோயிலுக்கு பந்த சேவை எடுத்து செல்பவரை மரியாதை செய்யும் விதமாக, மாட்டு வண்டியில் அமர வைத்து, தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள ரங்கநாதர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
அதன் பின்பு கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, பந்த சேவை எடுப்பவருக்கு, லட்சுமணன், அனுமன் போன்று வேடமணிந்த சிறுவர்கள் பாதபூஜை செய்தனர். இந்நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட பாஜக, இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.