தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 18, 2020, 1:36 PM IST

ETV Bharat / state

வேளாண் சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர்: செட்டிபாளையத்தில் பாஜக சார்பில் வேளாண் சட்டத்தை ஆதரித்து சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

bjb
bjb

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அதன் சிறப்புகள் மற்றும் நன்மைகளை மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எடுத்துக் கூறும் வகையில் கோயம்புத்தூரில் தெற்கு தொகுதி பாஜகவினர் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். செட்டிப்பாளையத்திலிருந்து க.க.சாவடி வரை நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் வேளாண் சட்டத்தின் நன்மைகளை கூறும் பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

பாஜகவினர் விழிப்புணர்வு பேரணி

இந்த விவசாய சட்டத்தால் வரிகள் குறையும், நேரடி வர்த்தகம் ஊக்குவிக்கப்படும, இதில் இடைத்தரகர்கள் யாரும் வர இயலாது என தெரிவித்தனர். விளைபொருள்களை கள்ளச் சந்தையில் பதுக்க இயலாது, விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்ட முடியும் என பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறினார்.

இதையும் படிங்க:வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்களால் கரோனா பரவும் அபாயம்?

ABOUT THE AUTHOR

...view details