தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்.. கோவையில் இளம்பெண் தற்கொலை! - கோவை பெண் தற்கொலை

கோவை அன்னூரில் தனிமையில் இருந்ததை வீடியோ பதிவு செய்து இளைஞர் மிரட்டி வந்ததால் திருமணமான பெண் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 20, 2023, 10:12 AM IST

கோயம்புத்தூர்: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயது நபருக்கும், அதே மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட இருவரும் கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கெம்ப நாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 2021 முதல் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, 22 வயது இளம்பெண்ணுக்கும், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி முருகன் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது திருமணத்தை தாண்டிய உறவாக மாறி அவ்வப்போது இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி தனிமையில் இருந்ததை பாண்டி முருகன் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இதனை கணவன், மனைவி இருவருக்கும் அனுப்பியதுடன் மிரட்டி இளம்பெண்ணுடன் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதுகுறித்து கணவன், மனைவி இருவரும் கடந்த 17-ஆம் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். பாண்டி முருகன் தொந்தரவு காரணமாக கடந்த சில நாட்களாக கணேசபுரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் தனிமையில் இருந்த வீடியோவை பாண்டி முருகன் அப்பெண்ணுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அந்த பெண் கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த அன்னூர் போலீசார் விரைந்துச் சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி நான்கு ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதனிடையே பெண்ணின் தற்கொலைக்கு காரணமான பாண்டி முருகன் கேரளாவில் தலைமறைவாக இருந்த நிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. காதல் மனைவியை கொடூரமாக கொலை செய்த நபரை தேடும் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details