தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு, இணையதளம் மூலம் பாடங்களும் தேர்வுகளும் நடத்தப்பட்டன. கரோனா முதல் அலை பரவல் காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள், பின்னர் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டும்கல்லூரிகள் மூடப்பட்டு, இணைய தளம் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இணையவழியாக செமஸ்டர் தேர்வுகள் - பாரதியார் பல்கலைகழகம் அறிவிப்பு! - Bharathiyar university announcement
கோயம்புத்தூர்: செமஸ்டர் தேர்வுகள் இணையதளம் மூலம் நடத்தப்பட்படும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இணையவழி தேர்வுகள்-பாரதியார் பல்கலைகழகம் அறிவிப்பு:
இந்நிலையில், மே 10ஆம் தேதி முதல் இணையம் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், “மே 10ஆம் தேதி முதல் இணையம் வழியாக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும். இளநிலை, முதுகலை படிப்புகளுக்கான அரியர் தேர்வுகளும் இணையம் வழியாக நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்