ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் கொண்டாடப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, அடிப்படைவாத அமைப்புகள் சில காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துவது வழக்கம். அதுபோல், 'பாரத் சேனா' என்ற அமைப்பினர், கோவையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குத் திருமணம் நடத்தி வைத்தனர்.
கடந்த திங்கட்கிழமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் காதலர் தின வாழ்த்து அட்டைகளை எரித்தும் கிழித்தும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்த நிலையில், இன்று பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில், பாரத் சேனா அமைப்பினர் ஆண் மற்றும் பெண் நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.