கோயம்புத்தூர், காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார் (47). ஆட்டோ ஓட்டுநரான இவர் கடன் தொல்லை காரணமாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த நிலையில், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து காட்டூர் பகுதியில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (ஆகஸ்ட்.02) காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சியுற்று காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் அடிப்படையில் நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினர் ஆனந்த் குமாரின் உடலை மீட்டனர். மேலும் அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த கடித்தையும் கைப்பற்றினர்.