தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட முயற்சி

கோவை ஆட்சியர் சமீரன் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலியாக வாட்ஸ் அப் கணக்கு தொடங்கி, மோசடியில் ஈடுபட முயன்றவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட முயற்சி
கோவை மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ் அப் கணக்கு மூலம் மோசடியில் ஈடுபட முயற்சி

By

Published : Jun 22, 2022, 6:23 PM IST

கோயம்புத்தூர்: மாவட்ட ஆட்சியர் சமீரனின் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி ஏதோ மொபைல் எண் மூலம் வாட்ஸ் அப் கணக்கு அடையாளம் தெரியாத நபர்களால் துவங்கப்பட்டுள்ளது. போலியான அந்த வாட்ஸ் அப் மூலம் மோசடியில் ஈடுபட முயன்றதாக, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் இது குறித்து கோவை சைபர் கிரைம் காவல் துறையினரிடம் ஆட்சியர் சமீரன் புகார் அளித்துள்ளார். அதில், தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட 8788019763 எனும் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து அமேசான் கிஃப்ட் பே, கூப்பன் மூலம் பணம் கேட்டு சிலர் மோசடியில் ஈடுபட முயன்றதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து சைபர் கிரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தனது பெயரில் நடந்த மோசடி முயற்சி குறித்து டிவிட்டரில் ஆட்சியர் சமீரன் பதிவிட்டுள்ளார். அதில்,‘கோவை மாவட்டத்தில் உள்ள உயர் அலுவலர்களின் புகைப்படங்களுடன் கூடிய எண் எனக் கூறிக் கொண்டு சில மர்ம நபர்கள், அரசு அதிகாரிகளின் அலைபேசி எண்ணுக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற மோசடி பேர்வழிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார். ஆட்சியர் பெயரில் போலி வாட்ஸ்அப் துவங்கப்பட்டு மோசடி செய்ய முயன்ற சம்பவம் அரசு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சிதம்பரம் நடராஜர் கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் - தமிழ் ஆர்வலர்கள் மனு

ABOUT THE AUTHOR

...view details