கோவை ஆலந்துறை அடுத்த மூங்கில் மடை குட்டை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் பதுங்கியிருப்பதாக மதுக்கரை வனச்சரக அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு ரோந்து சென்றனர்.
வனத்துறையினரை தாக்கிய போதை ஆசாமிகளுக்கு வலை - patrol
கோவை: வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை ஊழியர்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி விட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Forest
அப்போது அங்கு மது போதையிலிருந்த அவர்கள் வனகாப்பாளர் சோழமன்னன், ஊழியர்களை தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் இது குறித்து வனத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்த நபர்களை தேடி வருகின்றனர்.