தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லகு உத்யோக் பாரதி மாநாடு - மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பு

கோவையில் லகு உத்யோக் பாரதி நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

கோவை தென் மண்டல மாநாட்டில்- அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பு
கோவை தென் மண்டல மாநாட்டில்- அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பு

By

Published : Jan 8, 2023, 9:48 PM IST

கோவை: கோவையில் உள்ள தனியார் நட்சத்திர உணவகத்தில் நடைபெற்ற லகு உத்யோக் பாரதி நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

இதைத்தொடர்ந்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் தேசிய தலைவர் பல்தேவ் பாய் பிரஜாபதி, பொதுச்செயலாளர் மோகனசுந்தரம், துணைத் தலைவர் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டில் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், தொழில் மேம்பாடு, தலைமைப் பண்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நிபுணர்களின் உரைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய வானதி சீனிவாசன், ஆத்ம நிர்பார் திட்டத்தின் கீழ் பிரதமர் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளதாகவும், அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக கரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து மற்ற உலக நாடுகளுக்கு வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களான முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் மனோகர் பாரிக்கர் ஆகியோரை குறிப்பிட்டார். அவர்களது நேர்மை மற்றும் மக்கள் நலன் சார்ந்த செயல்களை குறிப்பிட்டுப் பேசினார்.

தொடர்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி குறித்து பேசியவர், லகு உத்யோக் பாரதி அமைப்பின் ஒவ்வொரு மாநாட்டிலும் தொழில் முன்னேற்றத்திற்காக வைக்கப்படும் கோரிக்கைகளை தான் நிறைவேற்றி வருவதாக குறிப்பிட்டார். மேலும், பிரதமர் மோடி, தொழில்துறை முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை வழங்கி உள்ளதாக குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:ஜம்முவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ABOUT THE AUTHOR

...view details