கோவை:கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் 2021ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி படித்த பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழ்நாடெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அந்தக் கடிதத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி தவிர தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். இதனைத்தொடர்ந்து பல்வேறு மாணவர்கள் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் உள்ளிட்டப் பலரும் போராட்டங்களில் இறங்கினர்.
இந்நிலையில் மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மாணவியின் வீட்டின் அருகில் வசித்து வந்த மனோஜ் ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்தது.
இதையும் படிங்க: ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்ப இயலாது - வானதி சீனிவாசன் அறிக்கை