தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 13, 2020, 8:28 AM IST

ETV Bharat / state

விடிய விடிய சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்!

கோவை: மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய மேற்கொண்ட சோதனையில், கணக்கில் வராத ரூபாய் இரண்டு லட்சம் ரூபாய் மற்றும் சில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விடிய விடிய சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்...
விடிய விடிய சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர்...

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் காரமடைசாலை பேருந்து நிலையம் அருகில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் சார் பதிவாளர் அலுவலராக (பொறுப்பு) லதாராணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அலுவலகத்திற்குப் பத்திரப்பதிவு, வில்லங்க சான்று பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்ட தொகையைவிட அதிகமாக வசூலிப்பதாக பொதுமக்களிடமிருந்து கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், கோவை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் அலுவலர் லதாராணி உள்பட நான்கு அலுவலர்கள், இடைத்தரகர்கள் நான்கு பேர் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் பாதுகாப்பு அறை, யு.பி.எஸ், பேட்டரிகள் வைக்கப்பட்டிருந்த அறை, அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூபாய் 2 லட்சம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று (திங்கள்கிழமை) மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அதிரடி சோதனை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வரை நடைபெற்றது. இந்தச் சம்பவம் மேட்டுப்பாளையம் நகரில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details