கோயம்புத்தூர்:முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இல்லம் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இல்லங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை வடவள்ளியில் உள்ள ஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக கருதபடும் சந்திரசேகர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்த்து அவரது இல்லத்தின் முன்பு அதிமுக தொண்டர்கள் சிலரும் வழக்கறிஞர்களும் திரண்டுள்ளனர். இதனால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.