கோவை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று கோவை வந்துள்ளார். கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் ஜே.பி. நட்டா வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், விமான தாமதம் காரணமாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அவரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.
பின்னர் கோவில் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ' கோவை, நீலகிரி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம்’ என்றார்.