பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மகேந்திரன் இன்று பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவருடன் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர் .
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தபோது கோவை -பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கம் செய்தது போன்ற பணிகளைச் செய்து இருப்பதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 ஆயிரம் கோடி அளவிலான திட்டப் பணிகளைச் செய்யப்பட்டுள்ளது.
ஆனைமலை நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த வல்லுநர் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இந்த தேர்தலில் என்னைத் தேர்ந்தெடுத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தைப் போன்று கோவை திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்," உறுதியளித்தார்.
அதிமுக வேட்பாளர் மகேந்திரன்