தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பூத் ஸ்லிப்பால் நேர்ந்த விபரீதம்: அதிமுக - திமுக இடையே மோதல் - Controversy over Booth Slip Issue

பொள்ளாச்சி: ஆட்சிபட்டியில் பொதுமக்களுக்கு பூத் ஸ்லிப் வழங்குவதில் அதிமுக - திமுக இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

an-accident-caused-by-a-booth-slip
an-accident-caused-by-a-booth-slip

By

Published : Dec 27, 2019, 12:25 PM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டி ஊராட்சிக்கு உட்பட ஐந்தாவது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் கல்யாணி என்பவரும், அதே வார்டில் திமுக சார்பில் பூங்கொடி என்பவரும் போட்டியிடுகின்றனர்.

இதையடுத்து அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கல்யாணியின் கணவர் காளிராஜ், அப்பகுதி பொதுமக்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திமுக சார்பில் போட்டியிடும் பூங்கொடியின் கணவர் முத்துசாமிக்கும், காளிராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

ஆதிமுக, திமுக இடையே மோதல்

இதில், இருவரும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதில் காளிராஜின் காது பகுதியில் காயம் ஏற்பட்டு பொள்ளாட்சி அரசு மருத்துவமனையிலும், முத்துச்சாமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தையடுத்து அதிமுக, திமுக-வினரிடம் பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் ஆர்வத்துடன் வாக்களித்து வரும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details