தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் - பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்களை தண்டிக்கும் வகையில் இட மாற்றம் செய்த உயர் அலுவலர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொள்ளாட்சியில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By

Published : Oct 8, 2020, 10:37 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாட்சியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பல்வேறு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூரில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்களை இடமாற்றம் செய்த உயர் அலுவலர்களை கண்டித்து பல்வேறு கட்சியினர் இன்று (அக். 08) ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில், பெரியார் சிலைக்கு காவல் துறைச் சார்ந்தவர்கள் மாலை அணிவிக்க கூடாதா? சீருடை பணியாளர்கள் விதிகளுக்கு மாறாக ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டுக்கொண்டு, தாடி வளர்த்துக்கொண்டு பணிக்கு வருகின்றனர். அதேபோல் காவல்துறையினர் சீருடையுடன் கோயில்களில் தீ குண்டங்களில் இறங்கி வழிபாடுகள் நடத்துகின்றனர். இதுபோன்ற அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எதற்காக? எனக் கேள்வி கேட்டு கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு அரசு உடனடியாக மூன்று காவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்ட உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் எனக் கோரிக்கைவைத்து ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இப்போராட்டமானது பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதில் மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக, தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கடலில் கரைத்த பெருங்காயம் போல திமுகவின் நிலை!'

ABOUT THE AUTHOR

...view details