கோயம்புத்தூர் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட கொண்டம்பட்டி, கோதவாடி பொள்ளாச்சி பகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் தேர்தல் பரப்புரைக்காக வந்த திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு கொண்டம்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் அப்பகுதி விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று கோதவாடி குளத்தை பார்வையிட்டார். அப்போது 400 ஏக்கர் விவசாய நிலம் இன்று நீர் ஆதாரம் இல்லாமல் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, குறைந்துள்ளதாகவும் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் கொண்டுவரப்படும் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
விடியலை நோக்கி ஸ்டாலின் குரலில் மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி இதுகுறித்து அவர் பேசுகையில், ‘மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வரும்போது, கோதவாடி குளம் 180 ஏக்கர் நிலத்தை பாதுகாக்கவும், நீர்நிலைகளை தூர்வாரி நீர் பற்றாக்குறையை போக்க முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆகவே திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:திமுக நடத்தும் கிராம சபைக் கூட்டம் சட்டத்திற்கு விரோதமானது: எல். முருகன்