கோவை: கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நமீதா இன்று பரப்புரை மேற்கொண்டார். காந்திபுரம் ராமர் கோயில் அருகே பேசிய நமீதா, "வானதி சீனிவாசன் இங்கு பிறந்து வளர்ந்து உங்களுக்காகச் சேவை செய்துவருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகுதி மக்கள் 18 ஆயிரம் பேருக்கு மோடியின் திட்டங்களைக் கொண்டுசேர்ந்துள்ளார். 300 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து அவர்களின் கல்விக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார்.
எனவே, இங்கேயே பிறந்து வளர்ந்து உங்களுக்காகச் சேவைசெய்யும் வானதி சீனிவாசனுக்கு வாக்குச் செலுத்துங்கள் கோவையில் தாமரை மலரும் தமிழ்நாடு வளரும்" என்றார்.