தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி' - காட்டுயானைக்கு உணவுகொடுத்து குழந்தையாக மாற்றிய இளைஞர் - மக்கள் மகிழ்ச்சி

காயத்துடன் இருந்த காட்டு யானைக்கு உணவுகொடுத்து பாசம் காட்டிய 22 வயது இளைஞரின் உதவியால் யானை நிலப்பகுதிக்கு அழைத்து வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது.

காட்டு யானைக்கு உணவு கொடுத்து பாசம் காட்டிய வாலிபர்!!
காட்டு யானைக்கு உணவு கொடுத்து பாசம் காட்டிய வாலிபர்!!

By

Published : Sep 20, 2022, 6:09 PM IST

கோவை:பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள பரம்பிக்குளத்தில் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு காட்டு மாடுகள், புலிகள், மான்கள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தைச்சேர்ந்த சுங்கம் என்ற பகுதியில் இரண்டு வாரமாக காட்டு யானை ஒன்று, தன் காலில் காயத்துடன் ஆற்றங்கரையில் முகாமிட்டதாகத் தெரிகிறது.

இந்நிலையில் சுங்கம் பகுதியைச்சேர்ந்த பிரவீன்(22) என்பவர், அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ஆற்றில் மீன் பிடிக்கச்செல்லும்போதெல்லாம் காலில் அடிபட்ட காட்டு யானைக்கு உணவு அளிப்பதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இச்செயலால் காட்டு யானைக்கு பிரவீன் மீது ஓர் பாசமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. பிறர் யானையிடம் நெருங்குவதை யானை விரும்பாத நிலையில் பிரவீனை மட்டும் தனக்கு உணவை வழங்க வழி விட்டது.
இதை அறிந்த கேரள வனத்துறையினர் பிரவீனை வைத்து, யானையை ஆற்றுப்பகுதியில் இருந்து நிலப் பகுதிக்கு அழைத்து வந்தனர். அங்கு யானையின் காலிற்கு மருத்துவர்கள் உதவியோடு, தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காட்டு யானை தான் வசிக்கும் காட்டை விட்டு மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து மனிதர்களிடம் நம்பிக்கையுடன் பழகுவதைக்கண்டு அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

'பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி' - காட்டுயானைக்கு உணவுகொடுத்து குழந்தையாக மாற்றிய இளைஞர்

இதையும் படிங்க: கோவையில் அதே இடத்தில் மீண்டும் பெரியார் உணவகம் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details