கோயம்புத்தூர்: காந்திபுரம் கிராஸ்கட் சாலை 9வது வீதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மாநகரின் கிராஸ்கட் சாலையின் மையப் பகுதியில் உள்ளதால், இங்கு மது விற்பனை அதிகமாக நடக்கும். மாநகர் பகுதியில் உள்ள அலுவலகங்களில் பணி புரிவோர், கட்டிடத் தொழிலாளர்கள், கடை வியாபாரிகள், கடைகளில் பணி புரியும் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளிகள், ஐ.டி. நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இங்கு மது வாங்கி விட்டு அருகில் உள்ள பாரில் மது அருந்துவார்கள்.
இதனால் இந்த கடையில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோவை பெரிய கடை வீதி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (38) என்பவர், இக்கடையில் பிரபல தனியார் பீர் ஒன்றை வாங்கியுள்ளார். நண்பர்களுடன் அருகில் உள்ள பாருக்கு சென்று அந்த பீர் பாட்டிலைப் பார்த்த போது, அதில் சிறிய அளவிலான தூசிகள் மிதந்து உள்ளன.