தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொங்கல் விழாவில் நடனமாடிய பெண் கவுன்சிலர்கள் வீடியோ! - கோவை பெண் கவுன்சிலர்கள் நடனம்

கோயம்புத்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் கிராமிய பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

Etv Bharatவீடியோ:பொங்கல் விழாவில் நடனமாடிய கோயம்புத்தூர்  கவுன்சிலர்கள்
Etv Bharatவீடியோ:பொங்கல் விழாவில் நடனமாடிய கோயம்புத்தூர் கவுன்சிலர்கள்

By

Published : Jan 13, 2023, 1:24 PM IST

வீடியோ:பொங்கல் விழாவில் நடனமாடிய கோயம்புத்தூர் கவுன்சிலர்கள்

கோயம்புத்தூர்:கோவை டவுன் ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோயம்முத்தூர் மாநகராட்சி சார்பில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் கோலப்போட்டி, உரியடி, சமையல் போட்டி, பொங்கல் பானை அலங்கரித்தல், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் விழா நடைபெறும் பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்கனர். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பலரும் புத்தாடை அணிந்து கிராமிய சினிமா பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.

இது அங்குள்ள அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மதியம் நடைபெறும் பொங்கல் விழா பண்டிகை மற்றும் போட்டிகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படிங்க:Kodaikanal: பூத்துக்குலுங்கும் கண்கவர் ஆர்னமென்டல் செர்ரி மலர்கள்!

ABOUT THE AUTHOR

...view details