தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களின் கைவண்ணத்தில் திருச்சி சிறப்புகளை விளக்கும் ஓவிய கண்காட்சி..! - அகில இந்திய வானொலி திருச்சி

Trichy School of Design and Painting:தூரிகையில் திருச்சி என்ற தலைப்பின் மூன்று நாள் ஓவியக் கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தொடங்கிவைத்தார்.

A three day painting exhibition in Trichy
திருச்சி சிறப்புகளை விளக்கும் ஓவிய கண்காட்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2023, 9:57 PM IST

திருச்சி : தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும் வாழ்ந்த ஆளுமைகள் என்ற தலைப்பில் 38 மாணவர்களின் ஓவியக்கண்காட்சியை ,திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கண்காட்சியினை திறந்து வைத்தார்.ஓவியர் மார்க் ரத்தின ராஜ் ஓவியங்கள் குறித்து சிறப்புரையாற்றினார்.

திருச்சி டிசைன் ஓவிய பள்ளியின் 13 ஆண்டுவிழாவை முன்னிட்டு தூரிகையில் திருச்சி என்ற தலைப்பின் கீழ் திருச்சி உருவான கதை, மலைக்கோட்டை உருவான கதை இஸ்லாமியர் புனித நத்ஹர் வலி தர்கா, வீரமாமுனிவர், கோடுகளின் ஆதியும் வண்ணங்களின் மூலமும் ஓவியர் ஆதிமூலம், கரிகாலன் முதல் காட்டன் வரை, காலத்தின் கையில் கல்லணை என்ற தலைப்பிலும், கற்றவர்கள் தலை வணங்கும் கோயில், காலத்தால் நிமிர்ந்து நிற்கும் மூத்த திருச்சி கல்லூரிகள், மகாத்மா காந்தி திருச்சி வருகை, தாகம் தீர்த்த தலைவர் ரத்தினவேல், மலையப்பனின் மகத்தான வாழ்வும் சாதனைகளும், ராணி மங்கம்மாள் கதை, ஆயிரம் கண்ணுடைய சமயபுரம் மாரியம்மன், கரிகால சோழன், கி.ஆ.பெ.விசுவநாதன், பாரத மிகு மின் நிலையம், பறவைகள் பலவிதம், எழுத்தாளர் குமுதினி, தந்தை பெரியார் மாளிகை ஆகியவை குறித்த ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.

கிளாரினெட் ஏ.கே.சி. நடராஜன், கவிஞர் திருலோக சீதாராமன், கலை காவேரி நுண்கலைகல்லூரி, மக்களின் தோழர் எம்.கல்யாணசுந்தரம், திருச்சி வேளாண்மையின் மகத்துவம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா , காதோடுதான் நான் பேசுவேன் அகில இந்திய வானொலி திருச்சிக்கு வந்த வரலாற்றைப் பற்றியும், சுழலில் சிக்கிய ஆளுமை ஐயரின் வாழ்க்கை வரலாறு, எம்.கே.டி.பாகவதர், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், நடிகைவேல் எம்.ஆர்.ராதா, முதலாம் மொழிப் போரில் திருச்சி என பல்வேறு சீல் திருச்சியில் வரலாறும் ஆளுமைகளைப் பற்றி ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மானவர்களின் ஓவியங்களை கண்டு ரசித்ததோடு அவை குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தனர்.

மேலும், ஓவியக் கண்காட்சி மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளது.வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பிரிவிற்கு முதல் 3 இடங்கள் என்ற அடிப்படையில் தங்கம் வெள்ளி நாணயங்கள் பரிசளிக்கப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் நடிகை ரோகிணி பங்கேற்று பரிசுகளை வழங்குவார் என தெரிவித்துள்ளனர்.

டிசைன் பள்ளி தாளாளர் நஸ்ரத் பேகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.கவிஞர் நந்தலாலா திருச்சி மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பொற்கொடி யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க :Madurai Train Accident: உயிரிழந்தவர்களின் உடற்கூராய்வு நிறைவு - நாளை விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details