தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பரை சுத்தியால் அடித்துக் கொலை செய்தவர் கைது - கொலை ஒருவர் கைது

கோவையில் சிறிய வாக்குவாதத்தில் நண்பரை சுத்தியால் அடித்துக் கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.

man
man

By

Published : Sep 8, 2022, 9:20 PM IST

கோயம்புத்தூர்: கோவில்பாளையத்தை அடுத்துள்ள விஸ்வாசபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன்(47) என்பவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது பூர்வீகம் திருவையாறு. வேலைக்காக குடும்பத்துடன் விஸ்வாசபுரத்தில் தங்கியுள்ளார். இவரது மனைவி பிரேமா விளாங்குறிச்சியில் உள்ள சத்துணவு மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரேமாவிற்கும், கோவையைச் சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜெகனின் சொந்த ஊரும் திருவையாறு என்பதால், இவர்கள் குடும்ப நண்பர்களாக மாறினர். தான் பணிபுரிந்த நிறுவனத்திலேயே ஜெகனுக்கு வேலை வாங்கி கொடுத்தார் கார்த்திகேயன். கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன் வீட்டிலேயே ஜெகன் தங்கியுள்ளார்.

ஜெகன் தனது பாஸ்போர்ட்டை பிரேமாவிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும், அதை பிரேமா தொலைத்ததாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக கார்த்திகேயனுக்கும் ஜெகனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று(செப்.8) கார்த்திகேயனும், ஜெகனும் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு ஜெகன் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த கார்த்திகேயன், அங்கிருந்த சுத்தியலை எடுத்து ஜெகனைத் தாக்கினார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஜெகன் உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், போலீசார் வருவதற்குள் கார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். இதையடுத்து தீவிரமாக தேடிய போலீசார், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் கார்த்திகேயனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: மாடியிலிருந்து காதலியை தள்ளிவிட்ட காதலன்... பாய் பெஸ்டியுடன் இருந்ததால் ஆத்திரம்..

ABOUT THE AUTHOR

...view details