தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

95 வயதில் கரோனாவிலிருந்து மீண்ட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்; வாழ்த்தி வழியனுப்பி வைத்த மருத்துவக் குழு - coimbatore latest news

கோயம்பத்தூர்: 95 வயதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் கரோனாவை வென்றது அனைவருக்கும் தையரியத்தை வரவழைத்துள்ளது.

கரோனாவில் இருந்து மீண்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!
கரோனாவில் இருந்து மீண்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

By

Published : May 21, 2021, 7:29 PM IST

தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பழனிசாமி (95). சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு செல்வபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். சோதனையில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, மருத்துவர் விஸ்வநாதன் தலைமையிலான மருத்துவக் குழுவின் கீழ் சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சையின் முடிவில் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். 95 வயதிலும் அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையை ஏற்றுக்கொண்டு, மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்ததன் பலனாகவும், தனது மன தைரியத்தின் காரணமாகவுமே அவர் பூரண குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆசிரியர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பலரும் கைதட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பில் முதலிடத்தில் நீடிக்கும் தமிழ்நாடு!

ABOUT THE AUTHOR

...view details