தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

75வது சுதந்திர தினம்: காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி - 75th Independence Day

75 ஆவது ஆண்டு சுதந்திர தினவிழாவையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் காவல்துறையினர் முகக் கவசம் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

By

Published : Aug 13, 2021, 11:08 PM IST

கோயம்புத்தூர்:நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த 200க்கும் மேற்பட்ட காவலர்கள் இன்று (ஆக.13) கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிவகுப்பு ஒத்திகையில் நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

வழக்கமாக சுதந்திர தினத்தன்று பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காவல் துறையின் அணிவகுப்பு நிகழ்ச்சி மட்டும் நடைபெறவுள்ளது. கோவையில் இம்முறை புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர் சமீரன் கொடியேற்ற உள்ளார்.

காவலர்கள் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சுதந்திர தின விழா பாதுகாப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்படுகின்றன.

ரயில் நிலையங்களில் சோதனை

இதையும் படிங்க:'தமிழ்நாடு வல்லரசு நாடாக மாறும் என்பதை நிதிநிலை அறிக்கை காட்டியுள்ளது’ - ஈஸ்வரன் பேட்டி

ABOUT THE AUTHOR

...view details