தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கைக்கு பட்டுப்பாவாடை வாங்க சேமித்த பணம்- முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த சிறுமி! - கோயம்புத்தூர் செய்திகள்

கோயம்புத்தூர்: தங்கைக்கு பட்டுப்பாவாடை வாங்க சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தங்கைக்கு பட்டுப்பாவாடை வாங்க சேமித்த பணம்- முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த சிறுமி!
தங்கைக்கு பட்டுப்பாவாடை வாங்க சேமித்த பணம்- முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்த சிறுமி!

By

Published : May 13, 2021, 10:37 AM IST

தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி வரும் கரோனா தொற்றைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் பணிகளுக்காகப் பொதுமக்கள் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை ஏற்று பல்வேறு தரப்பினர் முதலமைச்சர் நிவாரண நிதிக்குப் பணம் அனுப்பி வருகின்றனர்.

கோவை காந்தி மாநகர் பகுதியைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் பழனிச்சாமி. இவரது மகள் பிரணவிகா (7). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி முதலமைச்சரின் வேண்டுகோளைத் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய தங்கையின் முதல் பிறந்த நாளுக்கு பட்டுப்பாவாடை வாங்க தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கலாம் எனத் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.

தந்தை பழனிச்சாமியும் சிறுமியின் எண்ணத்திற்கு ஒப்புதல் அழைத்துள்ளார். உண்டியலுடன் ஆர்.எஸ்.புரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு வந்தார். வங்கியில் கரோனா நோயாளிகளுக்காக, முதலமைச்சரின் நிவாரண நிதிக்குப் பணம் செலுத்த வந்திருப்பதைத் தெரிவித்து விட்டு, உண்டியலை வங்கியிலேயே வைத்து உடைத்து எண்ணியுள்ளார்.

அதில் தங்கைக்குப் பட்டுப்பாவாடை வாங்கச் சேமித்து வைத்திருந்த ரூ.1,516 இருந்தது. அவற்றை அப்படியே முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார் சிறுமி பிரணவிகா.

7 வயது சிறுமி தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ள சம்பவம் பொது மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க:அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ. 2000 வழங்க தடை கோரிய வழக்கு

ABOUT THE AUTHOR

...view details